கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் உயர் கல்வியை தொடரும் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமைஇடம்பெற்றது.(படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)

கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் உயர் கல்வியை தொடரும் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. குறித்த நிகழ்வு காலை 10 மணியளவில் பாடசாலை முதல்வர் எஸ்.பூலோகராஜா தலைமையில் இடம்பெற்றது.

விசேட வழிபாட்டினை தொடர்ந்து மாணவர்கள், விருந்தினர்கள் உள்ளிட்டோர் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது 2020ம் ஆண்டில் உயர்கல்வியை தொடர்வதற்காக தம்மை தயார்படுத்திக்கொண்ட பாடசாலை மாணவர்கள் வரவேற்கப்பட்டதுடன், அவர்களிற்கு ஆசிகளும் வழங்கப்பட்டது. நிகழ்வில் பாடசாலை முதல்வர், வலயக்கல்விப் பணிமனை உத்தியோகத்தர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.