கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோவில்வயல் பகுதியில் வெடிக்காத ஆர் பீ ஜீ குண்டு மீட்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோவில்வயல் பகுதியில் வெடிக்காத ஆர் பீ ஜீ குண்டு மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் பொதுமகன் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை துப்பரவு பணியில் ஈடுபட்ட போது குறித்த குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பளை பொலீசாருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் நீதி மன்ற அனுமதியை பெற்று குறித்த வெடிபொருள் செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது