
கிளிநொச்சி நகர்புற பாடசாலையில் 2020 உயர்பிரிவு மாணவர்கள் நால்வர் கெரோயின் போதைப்பொருளுடன் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை மலசலகூடத்தில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவிக்கின்றனர்