கிளிநொச்சி செப் 23 முகமாலை முன்னரங்கில் மீண்டும் எலும்புக்கூடு பெண் போராளியின் உடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது

இன்றைய தினம் அகழ்வு பணிக்காக திகயிடப்பட்டிருந்தது பெலிசார் மற்றும் இராணுவத்தினர் குறித்த  பகுதியினை பாதுகாப்பு செய்து வந்த நிலையில் நேற்றைய தினம் மதியம் 3 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி  த.சரவணராஜா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.

 இதில்  இரு  பெண் போராளிகளின்  இலக்க தகடுகள் மீட்கபட்டது.   ஒரு தொகுதி  எலும்புக்கூடு மீட்கப்பட்டது விடுதலைப்புலிகளால் வழங்கப்படும் இலக்கத்தடு மீட்கப்பட்டுள்ளது. 
அதில் த.வி.பு ஞா 0302 மற்றும் த.வி.பு. ஞ 0188 என அடையாளம் காணப்பட்டுள்ளது பி பிளஸ்  மற்றும் ஓ பிளஸ் ரத்த வைகையை சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அது சோதியா படையணியை சேர்ந்தவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த எலும்புக்கூட்டின் மண்டையோடும் மீட்கப்பட்டுள்ளது.

எதிரியிடம் அகப்பட்டால் தமது உயிரை மாய்பதற்காக விடுதலைப்புலிகளால் வழங்கப்படும் சைனட்(குப்பி) ஒன்றும்  பெண் போராளிகள் இடுப்பில் அணியும் பட்டியும் மீட்கப்பட்டது.
அத்துடன் உரப்பைகள் விடுதலைப்புலிகளின் வரி சீருடைகள் பச்சை கலர் சீருடைகள் பாட்டா ஒன்று பற்றிகள் சம்போ போத்தல்கள் போன்றவையும் மீட்கபட்டுள்ளது. துப்பாக்கி ஒன்று கைக்குண்டு இரண்டு மகசீன் 8 கோல்சர் கவர் மூன்று போன்றவையும் மீட்கபட்டுள்ளது. தொடர்ந்தும் இன்றைய தினமும் அகழ்வு பணி முன்னெடுக்கபட உள்ளதாக கிளிநொச்சி மாவட்ட நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.