கிளிநொச்சி ஏ-9 வீதியில் நேற்று (24-08-2020)மதியம் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பப் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

கிளிநொச்சி ஏ-9 வீதியில் நேற்று (24-08-2020)மதியம் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பப் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கிளிநொச்சி ஏ-9 வீதியின் மத்திய கல்லூரிக்கு முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.டிப்போ சந்தியில் இருந்து மத்திய கல்லூரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது பின்னால் அதே திசையில்  வந்த  இராணுவ  வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.பாடசாலையில் கல்வி கற்று வரும் தனது பிள்ளைகளை ஏற்றி வரச் சென்ற சமயமே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.இதன் போது விக்கினேஸ்வரன் தசாயினி  (வயது-35) செல்வா வீதி ஆனந்த புரத்தைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மற்றும் இராணுவ பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.