கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 25’09” ஆக உயர்வு

36′ வான் உயரம் கொண்ட இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 25’09” ஆக உயர்ந்துள்ளது.
வவுனியா 26′ அடி வான் உயரம் கொண்ட கல்மடு குளம் 22′ – 03″ அடியாகவும், 12′ அடி வான் உயரம் கொண்ட பிரமந்தனாறு குளம் 08′ – 03″ அடியாகவும், 10′ 06″ அடி வான் உயரம் கொண்ட கனகாம்பிகைக்குளம் 10′ 04″ அடியாகவும் உயர்ந்துள்ளது.


இதேவேளை 25′ அடி வான் உயரம் கொண்ட அக்கராயன்குளம் 19′ 10″ ஆகவும், 10” அடி வான் உயரம் கொண்ட  கரியாலை நாகபடுவான் குளம் 07’-03″  அடியாகவும், 19′ அடி வான் உயரம் கொண்ட புதுமுறிப்பு குளம்15’-07″ அடியாகவும் உயர்ந்துள்ளது.
மேலும் 8′ அடி வான் உயரம் கொண்ட குடமுருட்டிகுளம் 08′-04″ உயர்ந்து 04″ வான் பாய்வதாகவும், 09′ 06″ அடி வான் உயரம் கொண்ட வன்னேரிக்குளம் 09′-08″அயாக உயர்ந்து 2″ வான் பாய்வதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.
தொடர்ந்தும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.