கிளிநொச்சி இந்திரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கௌபி செய்கையின் அறுவடை விழா இன்று (28-08-2020)நடைபெற்றுள்ளது

கிளிநொச்சி இந்திரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கௌபி செய்கையின் அறுவடை விழா இன்று (28-08-2020) நடைபெற்றுள்ளது.
 கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசமாக காணப்படுகின்ற இந்திராபுரம் கிராமத்தில் மக்களினுடைய வாழ்வாதரத்தை  மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


 கிளிநொச்சி மாவட்டத்தின் கிளாலி  விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் கிராமத்தில் விவசாய வியாபார பங்குடமை நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக இவ்வாண்டு அமுல்படுத்தப்பட்டதன் ஊடாக 1600 கிலோ கிராம் கௌபி விதைகள் 100 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்படும் வகையில்  கரைச்சி கண்டாவளை பளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 202 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு இப் பயிர்ச் செய்கை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பளை இந்திராபுரம் பகுதியில் இன்று (28-08-2020) நடைபெற்ற அறுவடை விழாவில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதயன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு அறுவடையை ஆரம்பித்து வைத்தார் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரதி விவசாயப் பணிப்பாளர் அற்புதச்சந்திரன் மற்றும்  விவசாயிகள் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.