கிளிநொச்சியில் நாளை 70 பேரிடம் கொரோனா பரிசோதணை!

கிளிநொச்சி மாவட்டத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு எழுமாறாக 70 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மத்திய சுகாதார அமைச்சின் ஆலோசணைக்கு அமைய மாகாண சுகாதாரத் திணைக்களத்தால் இந்த பரிசோதணை மேற்கொள்ளப்படவுள்ளன.

அதன்படி நாளை நாச்சிக்குடா பிரதேசத்திலும் மறுநாள் வியாழக்கிழமை கிளிநொச்சி நகரிலும் வரும் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை பளை பகுதியிலும் எழுமாறாக தெரிவு செய்யப்படும் நபர்களிடம் கொரோனா தொடர்பான பீ.சி.ஆர். பரிசோதணை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி தென்பகுதிக்குச் சென்று வந்தவர்கள், பாரவூர்திச் சாரதிகள், பொலிஸார், முதியோர் இல்லத்தில் தங்கியிருப்போர், விடுதிகளில் தங்கியிருப்போர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 3 நாள்களில் 70 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதணைக்கான உயிரியல் மாதிரிகள் பெறப்படவுள்ளன. மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, அநுராதபுரம் வைத்தியசாலை உள்ளிட்ட ஆய்வுகூடங்களுக்கு அனுப்பப்படவுள்ளன.

கந்தகாடு புணர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.