கிளிநொச்சியில் காட்டுயானைகளின் தொந்தரவு அதிகரிப்பு – வாழ்வாதாரங்களும் அழிக்கப்படுகின்றன!

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கல்மடு தருமபுரம் பெரியகுளம் முரசுமோட்டை உரியான் போன்றபகுதிகளில்  நாளாந்தம் காட்டுயானைகளின் அழிவுகள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணியளவில்  தருமபுரம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த யானை இரண்டு  நாட்களுக்கு  முன்னர்  12 தென்னைமரங்களை அழித்துள்ளது.  

பின்னர் நேற்றைய தினமும் 5 பயன்தரக்கூடிய அளவிலான தென்னைமரங்களை  முற்றாக அழித்துள்ளது.சம்பவம்  தொடர்பாக  தருமபுரம்  பொலிசாருக்கு  வழங்கப்பட்ட தகவலுக்கமைய வனஜீவராசிகள் தினைக்களத்தின்  உத்தியோகஸ்தர்கள் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர். அவர்கள் யானை வெடி மூலம் யானைகளை விரட்டியடித்தனர் . இப்படி தினமும் நடைபெறுவதால் அவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக நேற்றையதினம் கண்டாவளை பிரதேச செயலாளரினால் யானை வெடிகள் தற்பாதுகாப்பிற்காக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆயினும் குறித்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒர் நிரந்தரத்தீர்வினை பெற்றுத்தரவேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.