கிளிநொச்சியில் இலவச மருத்துவ முகாம் ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது(படங்கள் இணைப்பு)

கிளிநொச்சியில் இலவச மருத்துவ முகாம் ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் குறித்த மருத்துவமுகாம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன் பயிற்சி நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. காலை 9.30 மணியளவில் ஆரம்பமான குறித்த மருத்துவ முகாமில் காண்பார்வை, சிறுநீரக கோளாருகளிற்கான பரிசோதனை மற்றும் சத்திரசிகிச்சைகளிற்கான ஏற்பாடும் மருத்துவங்களும், நோயற்ற வாழ்விற்கான விழிப்புணர்வு கருத்தரங்கும் இடம்பெற்றது. இதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், சிறிலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்ட பெண் வேட்பாளரான பவதாரணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.