கிரண், ஆர்ஜே அர்ச்சனாவை அடுத்து இன்னொரு நடிகையும் விலகல்? பிக்பாஸ் பரபரப்பு.

பிக்பாஸ் நிகழ்ச்சி நெருங்க நெருங்க அதில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் திடீரென கழண்டு கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே கிரண் ரத்தோட் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளதாக செய்திகள் வெளியானது என்பதும், ஆர்ஜே அர்ச்சனாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவர் பணிபுரிந்து கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிறுவனம் அனுமதி தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது நடிகை சனம் ஷெட்டியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் தனது யூடியூப் சேனலுக்காக சனம் ஷெட்டியை பேட்டி எடுத்தபோது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்த கேள்விக்கு நானும் இது குறித்து கேள்வி பட்டேன் என்று அவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் போட்டியாளராக சனம் ஷெட்டி கலந்து கொள்ளவிருப்பதாக இந்த நிகழ்ச்சியின் வட்டாரங்களில் இருந்து செய்தி கசிந்துள்ளது.