கிடுகிடுவென உயரும் காய்கறிகளின் விலை… காரணம் கூறும் வியாபாரிகள்!

இந்தியாவில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்வை சந்தித்துள்ளது. ஏற்கெனவே ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது விலை உயர்வால் மேலும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பருவமழையால் ஏற்பட்ட சேதம் மற்றும் எரிபொருட்களின் விலை உயர்ந்ததே இந்த நிலைமைக்கு காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர். 

மழையால் வெங்காயம் சேதமடைந்ததால், சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், ஊரடங்கால் பொருட்களை விளைவிப்பதிலும் சிரமம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். பொதுவாக 90 சதவீதம் வெங்காயம் மகாராஷ்டிராவில்தான் உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 

மேலும் ஊரடங்கு காரணமாக குறைவான எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதும் விலை உயர்வை சந்தித்துள்ளதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. மொத்தமாக கடந்த 15-20 நாட்களில் காய்கறிகளின் விலை 30 முதல் 40% வரை உயர்ந்துள்ளது. அதில் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, குடை மிளகாய், கத்திரிக்காய் ஆகியவைகளே அதிக உயர்வை சந்தித்துள்ளன.