காற்றாலைகளின் இறக்கைகளில் பறவைகளின் சின்னஞ்சிறு இறக்கைகள் மோதி இறப்பது சோகமாகத் தொடர்கிறது.

மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக நிறுவப்படும் காற்றாலைகளின் பிரம்மாண்ட இறக்கைகளில் பறவைகளின் சின்னஞ்சிறு இறக்கைகள் மோதி இறப்பது சோகமாகத் தொடர்கிறது.


சூழலுக்கு கேடு விளைவிக்காமல் மின்சாரம் உற்பத்தி செய்யும் வழிமுறையாகப் பார்க்கப்படும் காற்றாலைகளால் விளையும் சில பிரச்சனைகளில் இதுவும் ஒன்று.
இந்தப் பிரச்சனையின் தீவிரத்தைக் குறைக்க அறிவியலே இப்போது ஒரு வழியையும் கண்டுபிடித்துள்ளது.
காற்றாலையின் ஒரு இறக்கையில் கருப்பு நிறப்பூச்சு அடிப்பதன் மூலம் அவற்றில் பறவைகள் சிக்குவதை 70 சதவீதம் வரை தடுக்க முடியுமென்று ஓர் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.