காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்தின் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் கடலோர தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்  ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.