கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ‘அன்பிற்கினியாள்’

Image result for அன்பிற்கினியாள்

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஹெலன் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமான ‘அன்பிற்கினியாள்’ என்ற படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த டீசரில் அருண்பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் தந்தை-மகளாக நடித்துள்ளனர்.

இருவரின் ஆரம்பக் கட்ட அன்பு காட்சிகளும் அதன் பின்னர் வரும் த்ரில் காட்சிகளும் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. பிரவீன், ரவீந்திரா, பூபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசை அமைத்துள்ளார். ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உள்பட ஒருசில திரைப்படங்களை இயக்கியுள்ள கோகுல் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவும், பிரதீப் ராகவ் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை அருண்பாண்டியன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் போதே மிகப் பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.