கார்களுக்கான கொரோனா தடுப்பு சாதனங்களை அறிமுகப்படுத்தியது டாடா!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான விசேட ஆக்சஸெரீகள் மற்றும் சாதனங்களை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.

BS6 2020 Tata Tiago Facelift Launched – Top 5 Changes

கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்கும் வகையில், பல்வேறு புதுமையான ஆக்செஸரீகளை கார் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. காரில் பயணிப்பவர்கள் கொரோனா உள்ளிட்ட நச்சு நுண்கிருமிகளின் தாக்குதலுக்கான ஆளாகாமல் இருப்பதற்கான விசேஷமான பல ஆக்சஸெரீகள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு சாதனங்கள் மற்றும் ஆக்சஸெரீகளை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இதில், ஒரு பேக்கேஜ் போன்று வழங்கப்படுகிறது.

கார்களுக்கான கொரோனா தடுப்பு சாதங்களை அறிமுகப்படுத்தியது டாடா!

இந்த பேக்கேஜில், ஏர் ஓ பியூர் 95 என்ற கேபினுக்குள் காற்றை சுத்திகரிக்கும் ஏர் பியூரிஃபயர், ஏர் ஓ பியூர் 95 என்ற விசேஷ ஏர் ஃபில்டர் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு சாதனங்களும், கேபினுக்குள் இருக்கும் நச்சு நுண்கிருமிகளை அழிக்கும் திறன் படைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்களுக்கான கொரோனா தடுப்பு சாதங்களை அறிமுகப்படுத்தியது டாடா!

கார் மூடப்பட்ட நிலையில் 20 நிமிடங்கள் இந்த சுத்திகரிப்பு கருவிகளை ஆன்செய்து காருக்குள் வைத்திருந்தால், காருக்குள் இருக்கும் வைரஸ், பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டுவிடும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

கார்களுக்கான கொரோனா தடுப்பு சாதங்களை அறிமுகப்படுத்தியது டாடா!

இந்த விசேஷ பேக்கேஜில் சானிடைசர், என்-95 மாஸ்க்குகள், கையுறைகள், டிஸ்யூ பேப்பர் அடங்கிய பெட்டி, மஸ்டி டிஃப்யூசர் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. ஸ்டீயரிங் வீல், ஹேண்ட்பிரேக், கியர் நாப், இருக்கைகளுக்கு விசேஷ கவர்களும் இந்த பேக்கேஜில் வழங்கப்படுகிறது.

கார்களுக்கான கொரோனா தடுப்பு சாதங்களை அறிமுகப்படுத்தியது டாடா!

டாடா நெக்ஸான் மற்றும் ஹாரியர் ஆகிய இரண்டு கார்களுக்கும் இந்த விசேஷ கிட் விற்பனைக்கு கிடைக்கிறது. விரைவில் இதர கார் மாடல்களிலும் இந்த விசேஷ கிட் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.