காயா புயலினால் பாதிக்கப்பட்ட பூநகரி மீனவர்களிற்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் 30 குடும்பங்களிற்கு நண்டு வலைகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது

காயா புயலினால் பாதிக்கப்பட்ட பூநகரி மீனவர்களிற்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் 30 குடும்பங்களிற்கு நண்டு வலைகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச மண்டபத்தில் இடம்பெற்றது, காயா புயலினால் மீனவர்களின் வலைகள் மற்றம் தொழில்சார் உபகரணங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மீனவர்களிற்கு குறித்த நிறுவனத்தினால் இன்று உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது. முதல் கட்டமாக 

தெரிவு செய்யப்பட்ட 30 மீனவர்களிற்கு தலா பத்தாயிரம் ரூபா பெறுமதி வாய்ந்த நண்டு வலைகள் இதன்போது குறித்த நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக குறித்த நிறுவனத்தினால் 15 லட்சம் பெறுமதியான தொழில் உபகரணங்கள் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் முதல் கட்டமாக இன்று தெரிவு செய்யப்பட்ட மீனவர்களிற்கு இன்றைய தினம் வலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.