காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு ஜோடியான பிரபல நடிகை

yogi babu

தமிழ் சினிமாவில் காமெடி நடிகரான யோகிபாபு தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு ஜோடியாக பிரபல சீரியல் நடிகை நடித்து வருகிறார்.

நடிகை யோகிபாபு ஹீரோவாக நடித்துவரும் மண்டேலா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் என்பவர் நடித்து வருகிறார்.

ஷீலா ராஜ்குமார் அழகிய தமிழ மகள் என்ர சீரியலில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளார்.

இவர் ஏற்கனவே டூலெட் என்ற சர்வதேச விருதுகளை அள்ளிக்குவித்த படத்தில் நடித்துக் கவனம் பெற்றுள்ள நிலையில் மலையாள நடிகர் பகத் பாசிலுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இதுகுறித்து ஷீலா ராஜ்குமார் கூறியுள்ளதாவது: மண்டேலா படத்தில் என் கதாப்பாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் நெகட்டிவ் ரோல்களில் நடிக்கவும் தயார் எனத் தெரிவித்துள்ளார்.