காதல் பொழுது

Happy girl among wild flowers Stock Photo 01 free download

உறைந்து போன அணுக்களெல்லாம்
வெம்மையுணர்ந்த பொழுது
உருகி அருகில் அவளும்
அசைந்தாடிய பொழுது

கண்கள் இரண்டும்
நான்காய் பிரிந்தும்
கண்டதெல்லாம்
ஒற்றை பொழுது

கூந்தலின் களியாட்டம்
உள்ளங்காலின் இளஞ்சிவப்பென
உயிரில் உடல் தொலைந்த பொழுது

அந்த தேகத்தின் நறுமணம்
நுகர்ந்த பொழுது

காதலே முழுமை
என்ற பொழுது
காதலில் முழுமை
கண்ட பொழுது!
இதுவல்லவோ
பொழுதின் நிறைவு!