காதலில் நான் கண்ட இன்பம்……

What does it mean when a guy kisses you on the forehead? These 5 things  will tell you! | India.com

எத்தனை இடைவெளிகளின் நேசிப்பில் வாழ்ந்தாலும்
உன் அன்பெனும் போதையில் மூழ்கி எழுவதே
என் அன்றாட பொழுதினை இன்பமாக
கடத்தி செல்கிறது!!!

இமை மூடி உறங்கினாலும்
உன் நினைவுகளின்
சந்தம் என் மனதை
தினம் தட்டி எழுப்பி உன்
நேசத்தின் ஆழத்தை எனக்குள்ளே திணிக்கிறது….
உன் மீது நான் கொண்ட
நேசத்தின் ஆழத்தை
தாங்கி கொள்ளும் அளவுக்கு
எனக்கு நானே ஆறுதல்
சொல்லும் பக்குவத்தை
என் மனதிடம் கற்றுகொண்டிருக்கிறேன்…
எத்தனை பொழுதுகள் கடந்து விட்டேன்
எத்தனை இராத்திரிகளில் உன் நினைவுகளின்
தாலாட்டில் கண்ணயர்ந்திருப்பேன்.
உன் குரல்களையே தினம் இன்னிசை
கீதமாய் இரசித்திருப்பேன்…

என் அருகில் நீ அமர்ந்து இருப்பதை போலவும்
உன்னுடன் தினம் கதை பேசுவது போலவும்.
உன்னை எனக்குள்ளே தினம் இருத்தி என் ஒவ்வொரு பொழுதுகளையும்
உன் நினைவுகளுடன் கடக்கிறேன்.
இனிமையாக தான் உள்ளது உன் நினைவுகள் நீ என் அருகில் இருப்பதை
என் அருகில் இருப்பது போன்று ஓர் அழகிய உணர்வு!!!!

மாலை மாருதம் வீசும் வேளையில் கடற்கரை அலையில்
என் கால்களை உரசி செல்லும் மென்மையான
அலையை போன்று உன் நேசிப்பின் ஆழத்தை எத்தனை முறை எனக்குள்
நானே இரசித்திருப்பேன்…

நீ செய்யும் அத்தனை
காதல் குறும்புகளிலும்
என்னை நானே மறந்து
உன் நினைவுகளிற்குள்ளே புதைந்து போகும்
ஓர் இனிமை இந்த காதலில்
நான் கண்ட இன்பம்……


திபீகா ஹஜேந்திரன்