காணிப்பிரச்சனைக்கு தீர்வினை வழங்குமாறு பெண் போராட்டம்!!

தனது மாமியாரால் வழங்கப்பட்ட காணியினை மீண்டும் அவர் உரிமைகோருவதாகவும் எனவே அந்த காணியினை மீட்டுத்தருமாறு கோரி பெண் ஒருவர் வவுனியா பிரதேச செயலகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.


குறித்த பெண் கருத்து தெரிவித்த போது…
தனது கணவனின் தாயாரால் வவுனியா கோவில்குளத்தில் நான்குபரப்பு காணி கடந்த 2006 ஆம்ஆண்டு  எழுத்துமூலமாக வழங்கப்பட்டது. தற்போது தனது கணவன் இறந்தநிலையில்  அந்த காணியினை மீண்டும் அவர் உரிமைகோருவதுடன் 2010 ஆம் ஆண்டு பொலிசாரின் பாதுகாப்புடன் வீட்டினையும் அமைத்துள்ளார்,எனவே கணவன் இறந்தநிலையில் தனக்கு கிடைக்கவேண்டிய காணியினை பெற்றுத்தருமாறு அவர் கோரிக்கை முன்வைத்ததுடன், தீக்குளிக்கபோவதாகவும் தெரிவித்தார்.
இதன்போது பதாதை ஒன்றை எந்தியபடி பை ஒன்றில் மண்ணெண்ணை போத்திலையும் அவர் வைத்திருந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் அவருடன் கலந்துரையாடலை ஏற்படுத்தியதுடன்,அவர் வைத்திருந்த மண்ணெண்ணை போத்திலை மீட்டதுடன் அவரை, பிரதேச செயலாளரிடம் அழைத்துச்சென்றனர்.
குறித்த காணி 1981 ஆம்ஆண்டிலேயே அவரது மாமியாரின் பெயரில் பதியப்பட்டிருப்பதாக பிரதேசசெயலாளர் இதன்போது தெரிவித்தார். 
இது தொடர்பாக சம்மந்தபட்ட மற்றைய தரப்புடனும் கலந்துரையாடி இதற்கான தீர்வினை பரிசீலிக்கலாம் என அப்பெண்ணிடம் பொலிசாரும் உறுதியளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.