காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!

விக்டோரியா நீர் தேக்கத்தில் நீராடச் சென்று காணாமல் போன நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
அம்பகோட்டை பிரதேசத்தினை சேர்ந்த 20 வயதுடைய குறித்த நபர் நேற்றைய தினம் நீராடச் சென்றுள்ள நிலையில் குறித்த அனர்த்தம் பதிவாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடற்படையினர் மற்றும் காவற்துறை இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சடலம் மீட்கப்பட்டுள்ளது.