காங்கோ நாட்டின் கனிம சுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு: குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழப்பு!

ஆப்பரிக்காவில் இயற்கை வளங்கள் அதிகம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக குடியரசு காங்கோ இருந்து வருகிறது. இதனால் இந்நாட்டில் ஏரளமான கனிம மற்றும் தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிவு மாகாணத்தில் உள்ள ஒரு கனிம சுரங்கத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு பணி புரிந்து கொண்டிருந்த ஏராளமானோர் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுரங்க விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலனவர்கள் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மேலும் நிலச்சரிவு குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.