காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காகாந்தியிடம் மன்னிப்பு கோரியது உத்தரப்பிரதேச காவல்துறை!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், பிரியங்கா ஆகியோர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஹத்ராஸ் சென்றனர். அப்போது, நொய்டா பகுதியில் அவர்களை தடுத்து நிறுத்திய காவலர் ஒருவர், பிரியங்காவின் குர்தாவை பிடித்து இழுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், காவல்துறை மன்னிப்பு கேட்டுள்ளது. 

இது குறித்து நொய்டா காவல்துறை வெளியிட்டுள்ள ட்விட்டரில், ‛மிகப் பெரிய கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் போது நடந்த இந்த சம்பவத்திற்கு காவல்துறை வருந்துவதாக கூறியுள்ளது. விசாரணை நடைபெறுவதாகவும், விசாரணைக்குப் பிறகு தண்டனை  உறுதி செய்யப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.