
கள்வனே
கவிதை தா என்றாய்
கவிதையா யாருக்கு என்றேன்,
கள்ளி எனக்கு தான் என்றாய்
கவிதை எது குறித்து என்றேன் ,
கண்ணம்மா உனக்கு தெரியாதா என்றாய்
கற்பனைகளை கவிதையாக வடித்திடவா
கனவுகளை கவிதையாக வடித்திடவா
கள்வனே குழம்பி தவிக்கின்றேன் அதனையே
கவிதையாக வடிக்க
கவிதை உயிர் பெற்றதே…..