கவலைபடாதீங்க சம்யுக்தா நீங்க தீபாவளி உங்க வீட்டுல தான் கொண்டாட போறீங்க!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தீபாவளி கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதில் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தபடியே அவர்கள் விரும்பும் ஒரு நபருடன் சேர்ந்து கொண்டாட வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அந்த வாய்ப்பு யாருக்கு என்று கடிதம் மூலம் தாங்கள் விரும்பும் நபரை போட்டியாளர்கள் எழுதுகின்றனர். இதில் அவர்களுடனான நினைவுகளை எழுதும்போது ஒவ்வொருவரும் கண்ணீர் விட்டு கவலைப்படுகின்றனர். இதில் ரமேஷ் எப்போதும் போலவே அவர் பாட்டுக்கு வேடிக்கை பார்த்துக்கொண்டே எழுதுகிறார்.

இதனை கண்ட ஆடியன்ஸ், ரமேஷ் ஆடியன்ஸா நின்னாரு, ரமேஷ் ஆடியன்ஸா தன்னை நினைச்சுக்கிட்டார். கடைசியில்
ஆடியன்ஸாகவே மாறிட்டாரு. பாருங்க முழுசா ஆடியன்ஸ் ஆக மாறின நம்ம ரமேஷ் பாருங்க… என ட்ரோல் செய்து வருகின்றனர்.

அத்துடன் இந்த வாரம் சம்யுக்தா எவிக்ஷனில் வெளியேற வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்படுகிறது. ஆகவே… நீங்க அழாதீங்க சம்யுக்தா நீங்க தீபாவளி உங்க வீட்டுல தான் புருஷனோடு கொண்டாட போறீங்க என நக்கல் அடித்து வருகின்றனர்.