கவர்ச்சி நடிகைகளுக்கு பாடம் எடுங்களேன்… குட்டி ஜானுவை பாராட்டி தள்ளும் ரசிகர்கள்!

Gouri Kishan starts shooting for 96 Telugu remake- Cinema express

விஜய் சேதுபதி , த்ரிஷா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான 96 படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. வழக்கமான மசாலா அம்சங்கள் எதுவும் இல்லாமல் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட இந்தப் படம் வெற்றியடைந்ததற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, சிறுவயது ராம் ஜானுவாக நடித்த ஆதித்யா மற்றும் கௌரியின் நடிப்பும் ஆகும்.

இப்படம் ரிலிசாகி 100 நாட்களைக் கடந்தும் இன்னமும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில் 96 படக் காதல் காட்சிகளின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. அதனையடுத்து சிறுவயது ஜானுவாக நடித்த கௌரி தொடர்ந்து Margamkali என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். கூடவே நிறைய குறும்படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார்.

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சி காட்டாமல் அழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்திருக்கும் கௌரி கிஷன் தற்போது அழகிய ட்ரடிஷனல் உடையணிந்து தேவதையாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.
பிரபல நடிகையாக வளர்ந்த பின்னரும் கவர்ச்சிக்கு நோ சொல்லும் அம்மணி கில்மா நடிகைகளுக்கு ஒரு பாடமாக இருக்கிறார்.