களுபோவில போதனா வைத்தியசாலைக்கு வேறொரு நோய்க்கு சிகிச்சைப் பெறவந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

களுபோவில போதனா வைத்தியசாலைக்கு வேறொரு நோய்க்கு சிகிச்சைப் பெறவந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.வேறு ஒரு நோய்க்கான அறிகுறிகளை கூறிய நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து களுபோவில வைத்தியசாலையின் 07 விடுதியில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளர்களை வீடுகளுக்கு அனுப்பியதாக வைத்தியசாலைபணிப்பாளர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதேவேளை கொரோனா தொற்றாளர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளதுடன் குறித்த விடுதியில் பணியாற்றிய 12 ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.