கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் பரீட்சார்த்திகளுக்கு விசேட அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை நிலைய சேவையாளர்களுக்காக  ரயில் சேவைகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அத்துடன் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரயில் சேவைகள் தவிர்ந்த, பிரதான மார்க்கம் புத்தளம் மார்க்கம் மற்றும் களனிவெளி மார்க்கம் என்பனவற்றில் இடம்பெறவுள்ள அனைத்து ரயில் சேவைகளும் இன்று முதல் இரத்து செய்யப்பட்டுள்ளன.ரயில் கட்டுப்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.