கறுப்பினத்தவரை பலமாக தாக்கிய டொரோண்டோ பொலீஸ் உத்தியோகஸ்தர் வழக்கில் தீர்ப்பு இன்று

2016 ஆம் ஆண்டில் Whitbyயில் ஒரு இளம் கறுப்பினத்தவரை தாக்கி காயப்படுத்திய  வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட   டொராண்டோ காவல்துறை ஊழியருக்கு  இன்று ஓஷாவா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது

இந்த ஆண்டின் தொடக்கத்தில் டொரோண்டோ  பொலீஸ் உத்தியோகஸ்தர் Michael Theriault கறுப்பு இனத்தவரான  Dafonte Miller  என்பவரை கடுமையாக தாக்கி அவரின் கண்ணில் பலத்த காயத்தை உண்டாக்கினார்

இந்த சம்பவத்தின் போது ஒரு கட்டத்தில், Michael Theriault தன்னை ஒரு உலோகக் குழாயால் கொடூரமாக அடித்தார், இதன்  “பயங்கரமான கண் காயம்” தனக்கு ஏற்பட்டது என்றும் தெரிவித்தார்

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து  Dafonte Miller தனது   ஒரு கண்ணில்  பார்வையை இழந்தார்

கடந்த ஆண்டு விசாரணையின்போது, ​​மில்லர், டிசம்பர் 28, 2016 அதிகாலையில் Thickson Road மற்றும் William Stephenson Driveஅருகே ஒரு நண்பருடன் நடந்து கொண்டிருந்ததாக சாட்சியமளித்தார், அப்போது Michael Theriault மற்றும் அவரது சகோதரர் அவரை அணுகி விசாரிக்க முயன்றதகவும் பின்னர் சாலை ஓரமாக தன்னை துரத்தி துரத்தி தாக்கியதாகவும் மில்லர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்

நீதிபதி தனது முடிவை காலை 9:30 மணிக்கு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.