கருப்பர் கூட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே வேல் யாத்திரை; எல்.முருகன்!

திருவண்ணாமலையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கிரிவலம் மற்றும் தீபத்திருவிழாவில் பக்தர்கள் கலந்த கொள்ள, தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். திமுக தலைவர் ஸ்டாலினின் பின்னணியில் உள்ள கருப்பர் கூட்டத்தின் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியே வேல்யாத்திரை நடைபெற்று வருவதாக எல்.முருகன் குறிப்பிட்டார். மேலும், போலீசார் கைது செய்தாலும், தொடர்ந்து வேல் யாத்திரை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார். இதனிடையே போலீசாரின் தடையை மீறி பொதுகூட்டத்தில் பங்கேற்ற முருகன் உள்ளிட்ட, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.