கருணாசை பாதித்துள்ள கொரோனா!

பணக்காரர், ஏழை என்ற எந்த பேதமும் இல்லாமல் கொரோனா தொற்று பாதித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கொரோனா குறித்த விழிப்புணர்வு விசயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறிய திரைப் பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஆரம்பத்தில் பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த கொரோனா, கொஞ்சம் கொஞ்சமாக கோலிவுட் பக்கமும் தன் வேலையைக் காட்டத் தொடங்கியுள்ளது. நடிகர் விஷால், அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து விட்டார். பிரபல பாடகர் எஸ்பிபி தனக்கு கொரோனா பாதித்துள்ளது குறித்து உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகரும் திருவாடானை எம்.எல்.ஏவுமான கருணாஸிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. முன்னதாக அவரது பாதுகாவலருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் கருணாஸிற்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.