கம்பஹா மாவட்டத்தில் ஞாயிறு கிறிஸ்தவ ஆராதனைகள் இடைநிறுத்தம்

கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், ஞாயிறுகளில் நடைபெறும் ஆராதனைகளை இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை கலாநிதி கெமிலஸ் பெர்னாண்டோ இது குறிப்பிட்ட அறிவித்தலினை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ஞாயிறுகளில் நடைபெறும் ஆராதனைகளை இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளாந்தப் பூஜைகள், திருமண நிகழ்வுகள், மற்றும் இறுதி கிரியை சடங்கு நடவடிக்கைகளுக்கு, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளின் படி, 50 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.