கம்பஹாவில் மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரும்வரை இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோன் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட திவுலபிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட பகுதிகளில் ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.