கம்பஹாவில் பதிவான கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதில் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மிகார எபா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று 61 ஆக பதிவாகியுள்ளது.

மஹர வைத்திய அலுவலர் பிரிவிலுள்ள 25கொரோனா தொற்றாளர்களும் கெலனிய வைத்திய பிரிவிலுள்ள 10கொரோனா தொற்றாளர்களுக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.கம்பாஹா மாவட்டத்தில் இதுவரை 3,195பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 2ஆவது தரப்பினரை கண்டறிவதற்கு  48,211 பி.சி.ஆர் பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.