கமல்ஹாசன் வேறு பணிகளுக்கு சென்று விடுவதால் கட்சிப் பணிகளில் தொய்வா? – மநீம துணைத் தலைவர் மகேந்திரன் பதில்

234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே தங்கள் கட்சியின் எண்ணம் என மக்கள் நீதி மய்யத்தின் மாநிலத் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.  

மக்கள் நீதி மய்யத்தின் ஈரோடு தென்மேற்கு மாவட்ட கட்சி அலுவலகம் திறப்பு விழா, கட்சிப் பொறுப்பாளர்கள் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகள் ஈரோட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் மருத்துவர் மகேந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மகேந்திரன் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார வேலை, கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட அனைத்து வகை பணிகளும் கடந்த 6 மாதமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேறு பணிகளுக்கு சென்று விடுவதால் கட்சிப் பணிகள் தொய்வடைந்துள்ளதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கும் அவர் மறுப்பு தெரிவித்தார்.