கமல்ஹாசனின் விக்ரம் டீசரும் காப்பியா? அட்லியாக மாறிக்கொண்டே வரும் லோகேஷ்!

நடிகர் கமல் நடிப்பில் உருவாக உள்ள விக்ரம் படத்தின் டீசர் நார்கோஸ் என்ற சீரியலின் காப்பி என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் கதை மற்றும் காட்சிகளைக் காப்பி அடிப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் சமீபகாலமாக இயக்குனர் அட்லி மற்றும் முருகதாஸ் ஆகியோர் மீது இந்த காப்பி அடிக்கும் குற்றச்சாட்டு அதிகமாக வைக்கப்பட்டு வருகிறது. இப்போது அந்த வரிசையில் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கிய கைதி திரைப்படம் அசால்ட் ஆன் பெர்சியண்ட் 13 என்ற படத்தின் தழுவல் என சொல்லப்பட்ட நிலையில் மாஸ்டர் திரைப்படமும் சைலன்ஸ்ட் என்ற கொரிய படத்தின் தழுவல் என சொல்லப்பட்டுள்ளது. இப்போது அவர் கமல் நடிப்பில் விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். அது சம்மந்தமான டீசர் ஒன்றை வெளியிட்டு இருந்தார். முதலில் அனைவராலும் ரசிக்கப்பட்ட அந்த டீசர், பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியான நார்க்கோஸ் சீரிஸின் டீசரின் காப்பி எனக் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதுபோல தொடர்ந்து தழுவல்களாகவே எடுத்துக்கொண்டு இருக்கும் லோகேஷும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.