“கமலின் வசனப்பேச்சு, சினிமாவுக்கு மட்டுமே நன்றாக இருக்கும்: கமலின் கருத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி!

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள பிகாரில் தாங்கள் வெற்றி பெற்றால் மாநிலத்தில அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்ற பாஜக அறிவித்தது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்,  “நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர், எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர், இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள். ஐயா ஆட்சியாளர்களே.. தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து” என  மத்திய, மாநில அரசுகளை மறைமுகமாக சாடியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் கடம்பூர் ராஜு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் வசனப்பேச்சு, சினிமாவுக்கு மட்டுமே நன்றாக இருக்கும், ஆனால் அரசியலுக்கு நன்றாக இருக்காது என  விமர்சித்துள்ளார்.