கனடா ஒண்டாரியோ மாகாணத்தில் கொரோனா தொற்று குணமாக்கல் 90.7வீதம்.

Focus Corona

கனடா ஒண்டாரியோ மாகாணத்தில் ஆகஸ்ட் மாதம் 16 ம் திகதி 106 புதிய COVID 19 தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இது ஆகஸ்ட் மாதம் 15 ம் திகதி பதிவான 92 புதிய COVID 19 பதிவுகளை விட கூடுதலாக 14 புதிய தொற்றுகள் இடம்பெற்றுஇருக்கின்றன.

மேலும் ஒருவர் COVID 19 தொற்று காரணமாக உயிர் இழந்துஇருக்கிறார். இந்த இறப்புடன் ஒண்டாரியோ வில் COVID 19 இனால்
உயிரிழந்தவர்களின் தொகை 2,789 ஆகஅதிகரித்துள்ளது.

ஒண்டாரியோ வில் உறுதிப்படுத்தப்பட்ட 40,565,தொற்றுகளில் 90.7வீதமானவை குணமாக்கப்பட்டுள்ளன.