கனடா ஒண்டாரியோ மாகாணத்தில் இன்று புதிதாக covid-19 தொற்று பதிவாகியுள்ளன.

கனடா ஒண்டாரியோ மாகாணத்தில் இன்று புதிதாக 138 COVID -19 தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது முதல் நாள் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையான 195 தொற்றுக்களை விட குறைவாகவே காணப்படுகின்றது. இந்த தொற்றுகளில் பாதிக்கப்பட்டவர்களில் 66 வீ தமானவர்கள் 40  வயதுக்கு  குறைவானவர்கள் என ஒண்டாரியோ அரசின் சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தனது டுவிட்டர்  பதிவில் தெரிவித்துள்ளார்.