கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான எல்லைப்பகுதி மார்ச் 21ம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு!

கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான எல்லைப்பகுதி கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு நாட்டின் எல்லைகளும் மார்ச் 21 ம் திகதி வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் தெரிவித்துள்ளார்.அத்துடன் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனையவற்றுக்காக எல்லைப்பகுதியை மூடும் முடிவினை மாதந்தோறும் மீளாய்வு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.