கனடாவில் COVID-19 முதல் தொற்றில் 80 % மரணங்கள் முதியோர் நீண்டகால பராமரிப்பு நிலையங்களில் இடம்பெற்றது

கனடாவில் COVID-19 தொற்றின் முதலாவது அலையின் இறப்புகளில் 80% வீதமானவை நீண்டகால பராமரிப்பு நிலையங்களில் நிகழ்ந்ததாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன

தொற்றுநோயின் முதல் அலைகளின் போது கனடாவின் COVID-19 நிலைமையின் மதிப்பீடு  புதன்கிழமை வெளியிடப்பட்ட தலைமை பொது சுகாதார அதிகாரியின் ஆண்டு அறிக்கையில் சுட்டி காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்

மூத்தவர்கள், அத்தியாவசிய சேவை ஊழியர்கள், விவசாயத் துறை ஊழியர்கள், பெண்கள் மற்றும் இனரீதியான கனடியர்கள் போன்ற குழுக்கள் இடையே COVID-19 தொற்றுநோய் தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்தியதாக டாக்டர் தெரசா டாம் கூறுகிறார்.

கனேடிய சமுதாயத்தில் அந்தக் குழுக்கள் பின்தங்கியவை என்றும் அவை COVID-19 ஆல் அளவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

உலகளவில், கனடா ஒரு மில்லியன் மக்கள்தொகையின் மொத்த  COVID-19 தொற்றுகளின் அடிப்படையில் 201 நாடுகளில் 79 வது இடத்திலும், மொத்த இறப்புகளில்  26 வது இடத்திலும் உள்ளது, என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருகின்றது

ஆகஸ்ட் மாத நிலவரப்படி நாட்டில் COVID-19 தொடர்பான இறப்புகளில் 80 சதவீதத்தினர் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வசித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது