கனடாவில் COVID-19 தொற்றினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 10 ,000 கடந்தது

COVID-19 இன் இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரம் அடைந்துவரும் இந்த நிலையில் கனடாவில்  COVID-19 தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ,௦௦௦ இனை கடந்துள்ளது

கோடைகாலத்தில் மிக குறைவான விகிதத்தில் பரவிய COVID-19 தொற்றுகள் குளிர் காலம் தொடங்கும் இந்த நேரத்தில் வேகமாக கனடாவின் மத்திய மற்றும் மேற்கு மாகாணங்களில்  COVID-19  தொற்று பரவல் அதிகமாக காணப்படுகிறது

கடந்த மே மாதம் 12 ம் திகதி வரை கனடாவில் 5000 பேர் COVID-19 தொற்றினால் பலியாகி இருந்தார்கள்

Winnipeg  தொற்றுநோயியல் நிபுணர்  Cynthia Carrசமீபத்திய வாரங்களில் COVID-19 வேகமாக பரவுவதைப் பற்றி கவலைப்படுவதாகக் கூறினார்.எங்கள் நாட்டில் COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட 20 பேரில் ஒருவர் மரணமடைவதாகவும்   “இது நாம் அடைய விரும்பும் ஒரு மைல்கல் அல்ல,என்றும் மேலும் தெரிவித்தார்