கனடாவில் கோவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதனால் டிசம்பர் நடுப்பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தொடும் அபாயம்

பொதுசுகாதாரத்துறையின் தலைமை மருத்துவர் தெரசா ரேம் கனடாவில் மருத்துவமனைகளில் நாள்தோறும் கோவிட் 19 தொற்றுக்கள் அதிகரித்து செல்வதால் கோவிட் 19 தொற்றாளர்களை கையாள்வதில் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுவருவதால் வழமையான செயற்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.இதனால் முற்கூட்டியே திகதி நிர்ணயம் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை போன்றவை பிற்போடும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்தார்.கோவிட் 19 தொற்றானது மேற்கு பிராந்தியங்கள் மற்றும் கியூபெக் மற்றும் ஒன்டாரியோ மாகாணங்களில் அதிகரித்து செல்வதனால் டிசம்பர் நடுப்பகுதியில் கனடாவில் கோவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தொடும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.இன்று அதிகாலை வரை கோவிட் 19 தொற்றால் கனடாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 295131 ஆகவும் உயிரிழந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 10947 உள்ளதாகவும் ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் இணைய தகவல் குறிப்பிடுகின்றது.