கனடாவில் காட்டுக்குள் இருந்து கேட்ட சத்தம் : தேடிச்சென்ற மின்சார வாரிய ஊழியர் கண்ட காட்சி

கனடாவில் மின்சாரவாரிய ஊழியர் பராமரிப்பு வேலைக்காக வனப்பகுதியின் பக்கமாக சென்ற வேளையில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டுள்ளது.
New Burnswick பகுதிக்கருகில் உள்ள வனப்பகுதிக்கு ஹெலிகாப்டர் ஒன்றில் சென்ற மின்வாரிய ஊழியர்கள் அவர்களில் ஒரு ஊழியரை அப்பகுதியில் இறக்கிவிட்டு பொருட்களை எடுத்துவரச் சென்றுள்ளனர்.
அப்போது உதவி கேட்டு அக் காட்டிற்குள் இருந்து யாரோ அழைக்கும் மெல்லிய குரல் அவரிற்கு கேட்டுள்ளது.
உடனே போலீசாருக்கு தகவல் அளித்ததோடு, தனது குழுவினரை உடனே அவ்விடத்திற்கு வரசொல்லியிருந்தார் அவ் ஊழியர்.
பொலிஸாரும், அவசர குழுவும் வரும் முன் அங்கு சென்ற மின்சாரவாரிய ஊழியர்கள் அந்த பெண்ணை கண்டுபிடித்து அவரை ஸ்டெச்சரில் படுக்கவைத்து அவரிற்கு முதலுதவியும் செய்துள்ளார்கள்.

அந்த வனப்பகுதிக்குள் ஹெலிகோப்டேரை இறக்க முடியாது என்பதால் அங்கிருந்து 1.3 கிலோமீட்டர் தூரம் ஸ்டெச்சரில் வைத்தே அந்த பெண்ணை தூக்கி சென்றுள்ளார்கள்.

அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது என்கிறார் பொலிஸ் அதிகாரியான cpl. kevin plourde


பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.


அவரது பெயர் jennymclaughlin அவர் Newbrunswick பகுதியை சேர்ந்தவர். நடந்தது என்னவென்றால் ஜூலை மாதம் 17 ஆம் திகதி அந்த பகுதிக்கு சென்ற jenny அந்த வன பகுதிக்குள் சிக்கிக்கொண்டுள்ளார்.


சுமார் இரண்டு வாரங்கள் காட்டில் கிடைத்த பழங்களை உணவாக உட்கொண்டும் அங்கு கிடைத்த தண்ணீரை குடித்தும் உயிர் வாழ்ந்துள்ள அவர், அங்குள்ள காட்டு மிருகங்களின் சத்தம் கேட்டு பயந்திருந்தாலும் தனக்காக தனது அன்பான குடும்பம் வீட்டில் காத்திருக்கின்றது என்ற எண்ணம் தான் தனக்கு உயிருடன் வாழ பலத்தை தந்தது என்கிறார் அவர்.
எனினும் காட்டு பகுதிக்குள் பயணித்ததால் உடலில் எற்பட்ட கீறல்கள் முதலான காயங்ககளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் வீடு திரும்பியுள்ளார்.
ஆனால் எதற்காக அந்த வனப்பகுதிக்குள் சென்றார் என்பதற்கான காரணத்தை கூற அவரும், பொலிஸாரும் மறுத்துவிட்டனர்.