கனடாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் அபாயம்! அதிகமாகும் உயிரிழப்புக்கள்.

கனடாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றினால் 686பேர் பாதிப்படைந்ததோடு, 11பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 21ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,14,597ஆக உயர்ந்துள்ளது. 8,901பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

5,836பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 99,860பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 2,225 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.