கனடாவின் covid -19 தொற்றுகளின் எண்ணிக்கை 300,000 னை கடந்துள்ளது

கனடாவின் covid -19 தொற்றுகளின் எண்ணிக்கை   300,000 னை கடந்துள்ளது .covid -19 தொற்று தொடங்கியதில் இருந்து நேற்றைய தினம் வரை மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை  300,000 னை கடந்துள்ளது

சுகாதார அதிகாரிகள் இந்த தொகை தொடர்பாக அதிர்ச்சியடைந்தாலும் கடந்த வாரங்களில் மிக விரைவாக அதிகரித்த covid -19 தொற்று பரவல் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்

கடந்த அக்டோபர் மாதம் 19 ம் திகதி கனடாவின் மொத்த covid -19 தொற்றுக்களின் எண்ணிக்கை 200,000 ஆக இருந்தது ஆனால் கடந்த ஒரு மாதத்தில் கனடாவில் 100,000 தொற்றுகள் பதிவாகியுள்ளன  covid  -19 தொற்றுக்களின்பரவல்  வேகம் அதிகரித்து செல்வதையே இது காட்டுகிறது என அவதானிகள் தெரிவிக்கின்றனர்

திங்கள்கிழமை பிற்பகல் நிலவரப்படி கனடாவில் சுமார் 50,000 covid -19 தொற்றுகள் பதிவில் உள்ளன,  240,000 பேர் குணமடைந்துள்ளார்,  11,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

Simon Fraser பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர்   Caroline Colijn, வேகமாக பரவிவருகின்ற covid -19 தொற்று   கவலை அளிக்கிறது என்றார்

தற்போதைய நிலைமை தொடர்ந்தால், டிசம்பர் தொடக்கத்தில் கனடா 400,000 மொத்த covid -19  தொற்றுக்களின் எண்ணிக்கையினை  எட்டும் என்று Caroline Colijn கணித்துள்ளார்

அரசாங்கமும் பொது சுகாதார கொள்கை வகுப்பாளர்களும் தெளிவான, சுருக்கமான மற்றும் ஆரோக்கியமான நடவடிக்கைகளை முன்வைக்க வேண்டும், மேலும் “மக்கள் உண்மையிலேயே தங்கள் திட்டங்களை மாற்ற வேண்டும் மற்றும் அவர்களின் தனிப்பட்ட தொடர்புகளை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.