கனடாவின் முன்னாள் பிரதமர் John Turner தனது 91வது வயதில் காலமானார்

John,Turner தனது வீட்டில் உறக்கத்திலேயே அமைதியாக  வெள்ளிக்கிழமை இரவு(sep18) காலமானதாக உறவினர்கள் சார்பாக பேசும் போது அவருடைய முன்னாள் உதவியாளர் Marc Kealey குறிப்பிட்டார்

John Turner, வசீகர தோற்றம் உடையவராகவும் சிறந்த கல்விமானாகவும் அதே நேரத்தில் நல்ல ஒரு விளையாட்டு வீரனாகவும் தனது இளவயதில் விளங்கினார் 1960 களில் ஒட்டாவாவுக்கு முதன்முதலில் வந்தபோது “கனடாவின் கென்னடி” என்று அழைக்கப்பட்டார் இவரின் ஆரம்ப கால அரசியல் வாழ்க்கை பலரும் எதிர்பார்த்தபடி  அமையவில்லை பல போராட்டங்களின் பின்பு தனக்கு கிடைத்த உயர் பதவியினை வெறும் 79 நாட்கள் மட்டுமே ஆட்சி செய்தார்

லிபெரல் கட்சியின் வீழ்ச்சிக்காலமாகி காலமாக கருதப்பட்ட1980 களில் இவர் கட்சியினை வழிநடத்தினார்

ஒலிம்பிக் தடகள வீரனுக்குரிய அனைத்து திறமைகளையும் கொண்ட இவர் தனது பட்டப்படிப்பை  University of British Columbia இல் 1949 இல் முடித்தார்  Rhodes புலமை பரிசில் மூலம் Oxford University சென்ற அவர் சட்டபடிப்பினை முடித்து கலாநிதி பட்டம் பெற Paris க்கு சென்றார்

Montreal நகரில் சட்டத்துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த காலத்தில் அந்த காலகட்டத்தில் லிபெரல் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த C.D. Howe அவரின் தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்குஉதவுமாறு கேட்கப்பட்டார், இத்துடன் இவரின் அரசியல் வாழ்க்கையும் ஆரம்பமானது. 1962இல் கியூபெக் மாகாணத்தில் St-Laurent-St-Georges தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரியப்பட்டார்