கனகராயன்குளம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

வவுனியா, கனகராயன்குளம் குஞ்சுக்குளம் பகுதியில் நிலத்தில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட வெடிபொருட்கள் விசேட அதிரடிப்படையினரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.  


அப்பகுதியில் உள்ள காணி ஒன்றினை புனரமைப்பு செய்வதற்கான வேலைகள் இடம்பெற்று வந்தநிலையில் நிலத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பது அவதானிக்கப்பட்டு கனகராயன்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

 
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மற்றும் விசேட அதிரடி படையினர்  வெடிக்காத நிலையில் காணப்பட்ட 8 மோட்டார் செல்களை, மீட்டுள்ளனர். 
நீதிமன்ற உத்தரவுடன் குறித்த வெடிபொருட்கள் செயலிழக்கச்செய்யப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.