கண்ணீர்!

How To Make Yourself Cry On The Spot: 11 Tips To Burst Into Tears

மறைத்து வைக்கப்பட்ட
அன்பின் வெளிப்பாடு
கண்ணீர்!

உள்ளத்தின் நுண்ணிய துளைகளில்
மறைந்து கிடந்த
கோபத்தின், இயலாமையின் வெளிப்பாடும்
கண்ணீர்!

அணை கட்டித் தடுத்தாலும்
ஆழ் மனதின் அன்பு
வெளிப்பட்டே தீரும்
விழிகள் வழி!

இமை என்னும் திரையால் இயலாது
உள்ளக்கிடக்கையை பூட்டி வைக்க!

உள்ளம் பாத்திரம்
விழிகள் அதன் மூடி!

உள்ளத்தின் அடியாழத்தில்
புதைந்து கிடப்பதை
உலகம் அறியாமல் போகலாம்
பாத்திரத்தின் மூடி அறியாத என்ன???